முதல் ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றிய பும்ரா - காணொளி!

Updated: Thu, Apr 11 2024 20:11 IST
முதல் ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றிய பும்ரா - காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இதுவரை 24 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற சுவாரஸ்யத்திற்கு பஞ்சாமில்லாம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறுகிறது.

அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அதிரடி வீரர் வில் ஜேக்ஸிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இப்போட்டியின் முதல் ஓவரில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிக்காட்டினர். இதனால் இன்னிங்ஸின் மூன்ராவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். அந்த ஓவரை அடித்து விளையாட முயற்சி செய்த விராட் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில் இரண்டு பவுண்டரிகளுடன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் டிம் டேவிட் கையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் ஆர்சிபி அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து டு பிளெசிஸுடன் ராஜத் பட்டிதார் இணைந்து விளையாடி வருகிறார்.

 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்து முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியின் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சொல்லி வைத்தது போல் எடுத்த காணொளியானது தற்போது வரைலாகி வருகிறது. இதனால் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கோலி, இப்போட்டியில் ஒற்றையிலக்க ரன்களோடு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை