விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை அடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கத்திலேயே பிராண்டன் கிங்கின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவருக்கு துணையாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் 43 ரன்களையும், ஷாய் ஹோப் 25 ரன்களையும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்பதீன் நைப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், குல்பதின் நைப் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த இப்ராஹிம் ஸத்ரான் 38 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 23 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஷித் கானும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News