IND vs NZ, 2nd ODI: டாஸின் போது தடுமாறிய ரோஹித் சர்மா; காணொலி!

Updated: Sat, Jan 21 2023 14:13 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றிருந்தது. இதனையடுத்து தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள 2வது போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் நடைபெறும் 50ஆவது மைதானம் இதுவாகும். வெற்றி ஆதிக்கத்தை தொடர்ந்து காட்ட இந்திய அணி வீரர்களும், தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் டாஸின் போதே சுவாரஸ்ய விஷயம் நடந்தது. டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா என்ன முடிவென்பதை நீண்ட நேரமாக சொல்லாமலேயே தயங்கிக்கொண்டிருந்தார். என்ன ஆனது என புரியாமல் எதிரணி கேப்டனும் குழம்பினார். இறுதியில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக முடிவெடுத்தார். முதல் முறையாக இந்த களத்தில் சர்வதேச போட்டி நடைபெறுவதால், என்ன தேர்வுசெய்வது என பலகட்ட ஆலோசனை நடந்தது. அதில் குழம்பிவிட்டேன் என விளக்கம் அளித்தார்.

இந்த களம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்குமே சம அளவில் உதவக்கூடிய ஒன்றாகும். பவுண்டரி எல்லைகள் நீண்ட தூரங்களில் இருக்கும். எனினும் சராசரியாக 280 வரை அடிக்கலாம். குறிப்பாக தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் கலக்கலாம். போக போக பிட்ச் மெதுவாக இருக்கும். இங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது நல்ல முடிவு தான். ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் பந்துவீச கடினமாக இருக்கும்.

 

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே அணியுடன் விளையாடுகிறோம் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை