பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் சர்வதெச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இந்திய அணியின் ஷுப்மான் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 

Advertisement

மேற்கொண்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3ஆம் இடத்திலும், விராட் கோலி 5ஆம் இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 8ஆவது இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் இரண்டு இடங்கள் முன்னேறி 21ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 29ஆவது இடத்தையும், பாகிஸ்தானின் சல்மான் அலி ஆகா 40ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 

இதுதவிர்த்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷனா முதலிடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் மூன்றாம் இடத்திலும், நமீபியாவின் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 5ஆம் இடத்திலும் தொடரும் நிலையில், ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் இரண்டு இடங்கள் பின் தங்கியுள்ளார். 

அதேசமயம் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் முதலிடத்திலும், முகமது நபி இரண்டாம் இடத்திலும் தொடரும் நிலையில், நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 2 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News