டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கும் விதமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலா இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

Advertisement

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார்.  இந்நிலையில், அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது. 

Advertisement

இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முடிந்ததும் சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றனர். அதன்படி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இந்த காணொளி மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News