வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்கவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியனது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 64 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 146 ரன்னிகளில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேசி கார்டி 40 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச தரப்பில் நஹித் ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 18 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் ஜக்கார் அலி 91 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் அந்த அணி 268 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் தைஜில் இஸ்லாம் பந்துவீச்சில் 185 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனூலம் வங்கதேச அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு வங்காளதேசம் பதிலடி கொடுத்ததுடன்,  1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக தைஜுல் இஸ்லாம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தொடர் நாயகன் விருதை தஸ்கின் அஹ்மத் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் கைப்பற்றினர். 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்டன் சீல்ஸ் விக்கெட் வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கோண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதற்காக கெவின் சின்க்ளேருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாகவும் விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News