வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரில் படுமோசமான தோல்வியைத் தழுவியதுடன் ஒயிட் வாஷும் ஆனது.

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமாயம் நடைபெற்று வரும் 2023-25ஆம் அண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி தொடராகவும் இது அமைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் அமீர் ஜாங்குவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதடித்து அசத்திய அமீர் ஜாங்கு, தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியிலும் தற்சமயம் வாய்ப்பு பெற்றுள்ளார். 

இதுதவிர்த்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டியும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமார் ஜோசப் மற்றும் அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. இவர்கள் தவிர, பேட்டிங் பிரிவில் மைக்கேல் லூயிஸ், அலெக் அதானாஸ், கேசி கார்டி மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் கீமார் ரோச், ஜேய்டன் சீல்ஸ் மற்றும் ஆண்டர்சன் பிலிப் ஆகியோர் உள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானஸ், கேசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மைக்கேல் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், கீமார் ரோச், கெவின் சின்க்ளேர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News