மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது. 

Advertisement

அதேசமயம் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி என 0.626 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், வங்கதேச மகளிர் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என 0.639 புள்ளிகளைப் பெற்று புள்ளிபட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் வங்கதேச அணி தகுதிபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதலிடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் மூன்றம் இடத்திலும், இலங்கையின் சமாரி அத்தபத்து நான்காம் இடத்திலும் தொடர்கின்றனர்.

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு அயர்லாந்தின் கேபி லூயிஸ் மற்றும் பாகிஸ்தானின் சிதரா அமீன் ஆகியோர் தலா 5 இடங்கள் முன்னேறி 17 மற்றும் 18ஆம் இடத்தையும், வங்கதேசத்தின் ஷர்மின் அக்தர் 8 இடங்கள் முன்னேறி 21ஆவது இடத்தையும், அயர்லாந்தின் ஏமி ஹண்டர், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், பகிஸ்தானின் முனீபா அலி உள்ளிட்டோரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். 

இதுதவிர்த்து பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் இங்கிலாந்தின் கேட் கிராஸ் ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தையும், வங்கதேசத்தில் நஹிதா அக்தர் இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும் பிடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் நஷ்ரா சந்து, சதியா இக்பால் மற்றும் ஃபாத்திமான் சனா உள்ளிட்டோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலைப் பொறுத்த வரையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அயர்லாந்தின் ஒர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தையும், பாகிஸ்தானின் ஃபாத்திமா சனா 10 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் சினெல்லே ஹென்றி 6 இடங்கள் முன்னேறி 20ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News