இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

Advertisement

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் அறிமுக வீரராக களமிறங்கப்பட்டார். ஆட்டம் தொடங்கியது முதலே ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் சதம் விளாசினார். அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசிய 17வது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.

இந்நிலையில், போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ஸ்வால் 150 ரன்களை கடந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் 171 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருபினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜாவும் அதிரடியாக விள்யாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்திய அணி தரப்பில் விராட் கோலி 72 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச், அல்ஸாரி ஜோசப், வாரிகன், அலிக் அதானாஸ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 250 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.   

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News