இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் டெஸ்ட் நிறைவடைந்த நிலையில் அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

Advertisement

கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களம் இறங்குவதன் மூலம் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார்.

Advertisement

அதாவது இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் கோலி நாளை இணைய உள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் விராட் கோலி களம் இறங்கினால் அது அவருடையை 500ஆவது சர்வதேச போட்டி ஆகும். இந்திய அணியில் இந்த மைல்கல்லை எட்டும் 4ஆவது வீரர் விராட் கோலி ஆவார். 

இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி முதல் இடத்திலும், முன்னாள் கேப்டன் எம்எஸ்தோனி (538) 2ஆம் இடத்திலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அராகுல் திராவிட் (509) 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News