WPL 2023: மேத்யூஸ், ஸ்கைவர் அதிரடியில் ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Mon, Mar 06 2023 22:50 IST
WPL 2023: Mumbai Indians dismantle RCB By 9 Wickets! (Image Source: Google)

முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் இன்று நடைபெறற 4ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனாவும், ஷோபி டிவைனும் களம் இறங்கினர். அதிரடியாக தொடங்கிய பெங்களூரு அணியின் டிவைன் அவுட் ஆன பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷோபி டிவைன் 16 ரன், மந்தனா 23 ரன், திஷா கசாட் 0 ரன். எலிஸ் பெர்ரி 13 ரன், ஹெதர் நைட் 0 ரன் என 71 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அனுஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இதில் அனுஜா 22 ரன்னிலும், ரிச்சா கோஷ் 28 ரன்னிலும் அவுட் ஆகினட். இதையடுத்து ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஷூட் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாகா ஆடிய ஸ்ரேயங்கா 15 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ரிச்சா கோஷ் 28 ரன், ஸ்ரேயங்கா, மந்தனா தலா 23 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டும், சைகா இஷாக், அமெலியா கெர் அகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 23 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவரும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு நிகராக விளையாடி வந்த நாட் ஸ்கைவரும் அரைசதம் கடக்க, மும்பை அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்து இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 38 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்களையும், நாட் ஸ்கைவர் 29 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை