Yashasvi Jaiswal Record: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற கௌதம் கம்பீரின் சாதானையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களையும், ஹாரி புரூக் 158 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வரும் இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங்க் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூல்ம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 28 ரன்களைச் சேர்த்தன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரது சாதனையும் யஷஸ்வி ஜெஸ்வால் சமன்செய்துள்ளார்.
முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் விரேதிர சேவாக் ஆகியோர் தலா 40 இன்னிங்ஸ்களில் இரண்டாயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 40ஆவது இன்னிங்ஸில் 2ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் விஜய் ஹசாரே மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் தலா 43 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களைக் கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக 2ஆயிரம் ரன்கள் அடித்த இந்தியர்கள் (டெஸ்டில்)
- 40 இன்னிங்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- 40 இன்னிங்ஸ்: ராகுல் டிராவிட்
- 40 இன்னிங்ஸ்: வீரேந்திர சேவாக்
இதுதவிர்த்து குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்த சாதனையை அவர் தனது 21 டெஸ்ட் போட்டிகளில் எட்டினார். முன்னதாக முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் 24 டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் அதனை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
குறைந்த போட்டிகளில் 2000 டெஸ்ட் ரன்கள்
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 21 டெஸ்ட்
- கௌதம் கம்பீர் - 24 டெஸ்ட்
- ராகுல் டிராவிட் - 25 டெஸ்ட்
- வீரர் சேவாக் - 25 டெஸ்ட்
- விஜய் ஹசாரே - 26 டெஸ்ட்