இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 

Advertisement

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடாத ருதுராக் கெய்க்வாட் ஒரு இடம் பின் தங்கி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய ஷுப்மன் கில் 36 இடங்கள் முன்னேறியதுடன் தரவரிசையில் 37ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

சர்வதேச டி20 பந்துவீசாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்ட்ஜே இரண்டாம் இடத்திலும், இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்திய வீரர் அக்ஸர் படேல் 4 இடங்கள் பின் தங்கி 13ஆம் இடத்தையும், குல்தீப் யாதவ் 4 இடங்கள் பின் தங்கி 16ஆவது இடத்திற்கு, ரவி பிஷ்னோய் 4 இடங்கள் பின் தங்கி 19ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

மேற்கொண்டு சர்வதேச டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இரண்டாம் இடத்திற்கும், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரஸா மூன்றாம் இடத்திற்கும், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 4ஆம் இடத்திலும், ஆஃப்கானிஸ்தானின் முகமது நபி 5ஆம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளனர். அதேசமயம் கடந்த வாரம் இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா 4 இடங்கள் பின் தங்கி 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News