சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா லண்டன் ஓவலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சுமாராக செயல்பட்டு கோப்பையை கோட்டை விட்டது.

Advertisement

அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை மிரட்டிய இந்தியா, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய தோல்வியை சந்தித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

Advertisement

இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ள இந்தியா அதற்காக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்று தென் ஆப்பிரிக்க தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இம்முறை எனக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது. குறிப்பாக இம்முறை தென் ஆப்பிரிக்கா வெல்லும் என்று நான் கருதுகிறேன். அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐசிசி தொடரை வென்றதில்லை. இருப்பினும் கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் அவர்கள் வெற்றியை நோக்கி சிறப்பாக வந்தனர். அதே போல பாகிஸ்தான் அணியும் இந்த உலகக் கோப்பையில் மிகவும் ஆபத்தானவர்களாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News