ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!

Updated: Fri, Jun 27 2025 21:16 IST
Image Source: Google

South Africa Playing XI: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர்கள் டெவால்ட் பிரீவிஸ் மற்றும் லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.

அதிலும் குறிப்பாக வழக்கமான கேப்டனுக்கு பதில் கேசவ் மஹாராஜ் தலைமையில் அந்த அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற கணிப்புகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் ஜிம்பாப்வே அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வலுவான தென் ஆப்பிரிக்க அணியை எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளெயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேசவ் மஹாராஜ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்களான லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இந்த அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ பிரீட்ஸி மற்றும் டோனி டி ஸோர்சி செயல்படவுள்ள நிலையில், மூன்றாம் வரிசையில் வியான் முல்டர் வாய்ப்பு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் குவேனா மபாகா, கார்பின் போஷ், கோடி யூஃபு ஆகியோருடன் வியான முல்டரும் பங்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி சோர்ஜி, மேத்யூ பிரீட்ஸ்கீ, வியான் முல்டர், டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் பிரீவிஸ், கைல் வெர்ரேய்ன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ் (சி), கோடி யூசுப், குவேனா மபாகா

Also Read: LIVE Cricket Score

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், நிக்கோலஸ் வெல்ச், டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வின்சென்ட் மசெகேசா, பிளெசிங் முசரபானி, தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை