Zimbabwe vs South Africa 1st Test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதிலும் குறிப்பாக வழக்கமான கேப்டனுக்கு பதில் கேசவ் மஹாராஜ் தலைமையில் அந்த அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற கணிப்புகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் ஜிம்பாப்வே அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வலுவான தென் ஆப்பிரிக்க அணியை எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ZIM vs SA 1st Test: Match Details

மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா
இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
நேரம்: ஜூன் 28, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs SA 1st Test: Live Streaming Details

ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில்  நேரலையில் காணலாம். 

ZIM vs SA : Head-to-Head In Test

  • Total Matches: 09
  • Zimbabwe: 00
  • South Africa: 08
  • No Result: 01

ZIM vs SA : Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 28 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 310 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 180 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 713 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Zimbabwe vs South Africa Predicted XIs

Advertisement

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், நிக்கோலஸ் வெல்ச், டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வின்சென்ட் மசெகேசா, பிளெசிங் முசரபானி, தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: மேத்யூ ப்ரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, டெவால்ட் பிரீவிஸ், டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், வியான் முல்டர், கைல் வெர்ரைன், கேசவ் மகாராஜ் (கேப்டன்), கார்பின் போஷ், கோடி யூசுப், குவேனா மபாகா

ZIM vs SA Dream11 Team

  • Wicket-keeper: கைல் வெர்ரைன்
  • Batters: மேத்யூ ப்ரீட்ஸ்கி, டெவால்ட் பிரீவிஸ்(கேப்டன்), கிரேய்க் எர்வின், பிரையன் பென்னட்
  • All-rounders: சீன் வில்லியம்ஸ், வியான் முல்டர்
  • Bowlers: குவேனா மபாகா, கார்பின் போஷ், பிளெஸிங் முஸரபானி(துணைக்கேப்டன்), ட்ரெவர் குவாண்டு
Advertisement

ZIM vs SA 1st Test Dream11 Prediction, ZIM vs SA Dream11 Prediction, Today Match ZIM vs SA, ZIM vs SA Test Series, ZIM vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs South Africa

Also Read: LIVE Cricket Score

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News