ஜிம்பாப்வே அணி சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

அதன்பின் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஜிம்பாப்வே அணியானது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் ஒருநாள் தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை நடத்தவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியானது, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

அந்தவகையில் ஜிம்பாப்வே அணி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது.

அதன்படி இந்த முத்தரப்பு தொடரானது ஜூலை 14ஆம் தேதி தொடங்கும் நிலையில், தொடரின் இருதிப்போட்டியானது ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயன இத்தொடர் ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா தொடர்

  • முதல் டெஸ்ட், ஜூன் 28 - ஜூலை 2 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
  • 2ஆவது டெஸ்ட், ஜூலை 6-10 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
Advertisement

முத்தரப்பு டி20 தொடர்

  • முதல் டி20, ஜூலை 14 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • 2ஆவது டி20, ஜூலை 16 - தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • 3ஆவது டி20, ஜூலை 18 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • 4ஆவது டி20, ஜூலை 20 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • 5ஆவது டி20, ஜூலை 22 - நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • 6ஆவது டி20, ஜூலை 24 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • இறுதிப்போட்டி, ஜூலை 26 - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

ஜிம்பாப்வே vs நியூசிலாந்து தொடர்

  • முதல் டெஸ்ட், ஜூலை 30 - ஆகஸ்ட் 3 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
  • இரண்டாவது டெஸ்ட், ஆகஸ்ட் 7-11 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News