Zimbabwe T20I Tri-Series: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியை சரிவிலிருந்தும் மீட்டெடுத்துள்ளார். 

Advertisement

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயண் செய்து அந்த அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற  முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் மதவெரே ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கிளைவ் மடான்டே 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பிரையன் பென்னட்டுடன் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிரையன் பென்னட் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் பார்லும் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் மறுபக்கம் விளையாடிய தஷிங்கா முசேகிவா 9 ரன்களுக்கும், டோனி முன்யோங்கா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர் மற்றும் பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News