
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வான்கடேவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் 75 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ஒரே போட்டியில் மீண்டும் ஹீரோ ஆனார். கடந்த சில மாதங்களாக ராகுல் சரிவர கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் சேர்ப்பதில்லை.குறிப்பாக டெஸ்டில் தனது துணை கேப்டன் பதவியையும் அடுத்து அணியில் இடத்தையும் இழந்தார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ராகுல் பரிதாபமான நிலையில் இருந்த அணியை வெற்றிக்கு ஜடேஜா உடன் சேர்த்து அழைத்துச் சென்றார்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கேஎல் ராகுல், “நான் மூன்று விக்கெட் இழந்த விதத்தை பார்த்தேன். மிட்செல் ஸ்டார்க் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். பந்தை அவர் ஸ்டெம்புக்கு கொண்டு செல்லும்போது, அவர் மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளராக இருக்கிறார். நான் இன்று எப்போதும் போல் சாதாரண கிரிக்கெட் ஆட்டத்தையே வெளிப்படுத்தினேன்.