
Zimbabwe vs South Africa 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி ரன்கள் ஏதுமின்றியும், மேத்யூ பிரிஸ்ட்கீ 13 ரன்னிலும், டேவிட் பெடிங்ஹாம் ரன்கள் ஏதுமின்றியும், வியான் முல்டர் 17 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர்கள் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்டோரியஸ் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்த, மறுபக்கம் பிரீவிஸும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 51 ரன்களை எடுத்திருந்த பிரீவிஸ் விக்கெட்டை இழந்தார்.