கபா டெஸ்ட்: பிளேயிங் லெவனில் மாற்றங்களைச் சேய்யும் இந்திய அணி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், பதிலுக்கு ஆஸ்திரேலிய அணியோ முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைக் குவித்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன் 175 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் அஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தது.
Trending
அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ளா கபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. அந்தகையில் கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இடம்பிடித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வினும், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இப்போட்டிக்கன பிளேயிங் லெவனில் இடம்பெறமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற்து.
ஒருவேளை அவர்கள் இருவரும் இப்போட்டியில் இடம்பிடிக்காத பட்சத்தில் அஸ்வினுக்கு பதிலாக ரவிச்சந்திரன் ஆஸ்வினும், ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஆகாஷ் தீப் முதலிரண்டு போட்டிகளிலேயே விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இடத்தில் ஹர்ஷித் ரானா களமிறங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
Win Big, Make Your Cricket Tales Now