ஸ்கோர் போர்டில் நாங்கள் வெல்லக்கூடிய ரன்களை கொடுத்து இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தப் போட்டியில் நான் உள்ளே நுழையும் பொழுதே எல்லா பந்துகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைத்தேன். அணியை சரியான நிலைக்கு கொண்டு வந்ததை உணர்கிறேன் என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிக அதிகபட்சமான மொத்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் அடித்தார்கள்.
மேலும் கேப்டன் கேஎல்.ராகுல் அரைசதம் அடிக்க, இறுதிக்கட்டத்தில் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 71 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து கம்பேக் கொடுத்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “எனது கவனம் கையில் ஏற்பட்ட பிடிப்பு மீதுதான் இருந்தது. நான் கிட்டத்தட்டஆட்டம் இழந்தேன். என்னுடைய பாட்டம் ஹாண்ட் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். இந்தப் போட்டியில் நான் உள்ளே நுழையும் பொழுதே எல்லா பந்துகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைத்தேன். அணியை சரியான நிலைக்கு கொண்டு வந்ததை உணர்கிறேன்.
மேலும் நேராக விளையாட வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது. பந்தை கடினமாக அடிப்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. டைம் செய்ய மட்டுமே நினைத்தேன். நான் உள்ளே செல்லும் பொழுது பவுன்ஸ் பல மாதிரி இருந்தது. நல்லவேளையாக ஆட்டத்தின் மொமண்டத்தை எங்கள் பக்கம் எடுத்துக் கொண்டு வர முடிந்தது. கில்லும் நானும் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினோம்.
நாங்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினோம். அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன் அடித்து விளையாட சரியாக இருந்தது. நான் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றதும், பந்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட முடிவு செய்தேன். அந்த நேரத்தில் கில் அடித்து விளையாடுவதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டார்.
பிறகு நானும் அந்தப் பொறுப்பை எடுத்தேன். ஒருவருக்கு ஒருவர் மிகச் சிறந்த ரிதத்தை எடுப்பதாக இருந்தது. இது அணிக்கு பலன் அளித்தது. பவுன்ஸ் மாறி மாறி ஆடுகளத்தில் இருந்தது. விளையாடுவது கடினம்தான். ஸ்கோர் போர்டில் நாங்கள் வெல்லக்கூடிய ரன்களை கொடுத்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now