Advertisement

கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement
2nd Test: Perhaps Some Guys Went Away From Their Methods, Says Pat Cummins On Batting Collapse
2nd Test: Perhaps Some Guys Went Away From Their Methods, Says Pat Cummins On Batting Collapse (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 19, 2023 • 10:52 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மிக மோசமான முடிவையே தந்தது. அவர்களின் பேட்டிங் தரம் பற்றி அவர்களையே சந்தேகப்படும்படி செய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 19, 2023 • 10:52 PM

ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் திரும்பி வந்தார்கள். நேற்றைய நாள் முடிவு வரை ஆட்டம் அவர்களது கையிலே தான் இருந்தது. இன்று காலை ஆரம்பித்த முதல் ஆட்ட நேரத்திலேயே அவர்கள் ஒன்பது விக்கட்டுகளை வேகமாக பறி கொடுத்து, கையில் இருந்த வெற்றியை தவறவிட்டார்கள்.

Trending

இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தங்கள் வசம் தக்கவைத்து சாதனைப்படைத்தது. 

இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “முதல் இன்னிங்ஸில் நாங்கள் எடுத்த 263 ரன்கள் நல்ல ரன்கள் என்று நினைத்தேன். எங்களுடைய வீரர்கள் மிக நன்றாக திரும்பி வந்தனர். ஆனால் இந்தியாவும் நன்றாக பேட்டிங் செய்தது. இப்படியான ஒரு 250 ரன் என்பது வெறும் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் மூலமே வந்து விடக் கூடியது. 

இரண்டு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆட்டம் சமநிலையில் இருந்தது. ஆனால் நாங்கள் ஆட்டத்தில் முன்னோக்கி இருந்து பின்பு பின்னோக்கி போய் விட்டோம். இது எப்படி நிகழ்ந்தது என்று எங்களுக்கு ஒரு மதிப்பாய்வு அவசியம். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும்தான் அவர்களது ஆட்டத்திற்கு பொறுப்பு. சில பந்துகளில் உங்களது பெயர் இருக்கும். ஆனாலும் கூட ஷாட் தேர்வு பற்றி எங்களுக்கு ஒரு ஆய்வு தேவை. 

இரண்டு ஆட்டங்களும் எங்களுக்கு ஏமாற்றத்தை தந்தன. ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு மிகவும் வேதனையானது. ஏனென்றால் இந்தியாவில் ஒரு ஆட்டத்தில் முன்னிலையில் இருப்பது அடிக்கடி நடக்காது. அப்படி இருந்தும் நாங்கள் கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது”  என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement