Advertisement

ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் முதால் போட்டியில் விளையாடாத நிலையில், அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 24, 2025 • 02:08 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 24, 2025 • 02:08 PM

இந்நிலையில் இப்போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ள நிலையிலும், அவரால் முதல் போட்டியில் விளையாட முடியுமான என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கேஎல் ராகுல் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க கூடிய மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Trending

அசுதோஷ் சர்மா

26 வயதான அதிரடி பேட்ஸ்மேன் அசுதோஷ் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அசுதோஷ் சர்மாவை ரூ.3.80 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில், அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சில போட்டிகளில் தனி ஒருவராக இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். மேற்கொண்டு அவர் 11 போட்டிகளீல் விலையாடி 167 என்ற சராசரியில் 189 ரன்களை எடுத்துள்ளார். இதனால் கேஎல் ராகுலுக்கு பதிலாக இவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. 

சமீர் ரிஸ்வி

இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் சமீர் ரிஸ்வி. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் அந்த சீசனில் அவர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்த ஏலத்தின் போது சிஎஸ்கே அணி அவரை விடுவித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ.95 லட்சத்திற்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. சமீர் ரிஸ்வின் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 22 இன்னிங்ஸில் 133 என்ற சராசரியில் 480 ரன்களை எடுத்துள்ளார்.

கருண் நாயர்

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பவர் கருண் நாயர். தற்போது 33 வயதான பேட்ஸ்மேன் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1496 ரன்களை எடுத்துள்ளார். இதனால் கேஎல் ராகுலுக்கு பதில் கருண் நாயர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement