ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறாரா பும்ரா?
இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சனிக்கிழமை எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக யார் கேப்டன் பதவியை வகிப்பார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி துணைக் கேப்டனாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அல்லது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
Trending
ஒருவேளை, ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை வகிப்பது என்ற சாதனையைப் படைக்கும். இதற்கு முன் கபில்தேவ் 1987இல் டெஸ்ட் அணியை வழி நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now