
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டெர்வீஸ் ஹெட் 33 ரன்களும், மிட்செல் மார்ஸ் 47 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய டேவிட் வார்னர் (23), அலெக்ஸ் கேரி (38), லபுசேன் (28) என அனைத்து வீரர்களும், ஆஸ்திரேலிய அணிக்கான தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு சரியாக செய்து கொடுத்ததன் மூலம் போட்டியின் 49 ஓவர்கள் முடிவில் 269 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.