
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து தொடர்ந்து சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவிடம் ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடரை இழந்திருக்கிறது. இதேபோன்று சொந்த மண்ணில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை தழுவி இருக்கிறது .
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா தோல்விக்கு பல காரணங்களை கூறியிருக்கிறார். அதில், “இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு பெரிய இலக்கு எல்லாம் ஒன்றும் கிடையாது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது மிகவும் முக்கியம். அதனை நாங்கள் செய்ய தவறி விட்டோம்.
அதனால் தான் தோல்வி அடைந்தோம். இது போன்ற ஆடுகளத்தில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்து இருப்பீர்கள். இந்த ஆடுகளத்தில் பொறுமையாக விளையாடி நீங்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். இந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை நாங்கள் பெற்றோம். ஆனால் ஏதேனும் ஒரு வீரர் தொடர்ந்து விளையாடி இருந்திருக்க வேண்டும்.