
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சாதனையை படைத்தது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரில் விராட் கோலி அதிகபட்சமாக இரண்டு சதங்களை அடித்துள்ளார் .முகமது சிராஜ் பந்து வீச்சில் கலக்கியுள்ளார்.
தொடரைக் கைப்பற்றியது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தத் தொடரை எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு விக்கெட்டுகள் தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். இது பார்ப்பதற்கு நிச்சயம் சிறப்பாக உள்ளது.
சிராஜ் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். இந்திய ஆடுகளத்தில் இது போன்ற சிலிப் பில்டர்கள் நிற்க வைத்து மிக நாட்கள் ஆகிவிட்டது. அந்த ஸ்லீப்கள் தேவை தான். முகமது சிராஜ் உடைய திறமை தனித்துவமானது. கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது திறமையை வளர்த்து சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முகமது சிராஜின் பலம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது நிச்சயம் இந்த கிரிக்கெட்டுக்கு சிறப்பான அம்சமாகும்.