மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா? - பென் ஸ்டொக்ஸ் பதில்!
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Ben Stokes on Jofra Archer: எட்ஜ்பாஸ்டன் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதுப்பிப்பை வழங்கியுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லாண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா என்ற கேள்விகள் அகரித்துள்ளன. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆர்ச்சர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவரால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியவில்லை. இதனால் தான் அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், “எல்லோரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதைப் பார்த்து, நாம் எடுக்க வேண்டிய முடிவு அது. மேலும் அவரது பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம். எனவே, லார்ட்ஸில் நடைபெறும் போட்டிக்கு அனைவரும் பரிசீலிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இதனால் இப்போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பரிசீலிக்கப்படுவார் என்பதை பென் ஸ்டோக்ஸ் உறுதிசெய்துள்ளார். அதேசமயம் இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சனும் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரும் லெவனில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பதை ஷுப்மான் கில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now