
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “முதல் நாளில் டாஸை இழந்தப் பிறகு, எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, குன்னேமான் முதல்நாள் முதல் செஷனில் சிறப்பாக செயல்பட்டதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம். குழுவாக எங்களது பௌலர்கள் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.