
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் இலக்கை எட்டி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றது. அதேசமயம் இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. அதில் விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128, அக்ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள்.