Advertisement

விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன்செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 26, 2024 • 14:36 PM
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரது அபாரமான பந்துவீச்சின் மூலம் 145 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Trending


இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 37 ரன்களையும் சேர்த்து மொத்தமாக 110 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இத்தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 655 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். இதன்மூலம் விராட் கோலியின் சாதனையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன் செய்துள்லா. 

அதன்படி முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2016-17ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டு சதம், இரண்டு அரைசதங்களுடன் 655 ரன்களை எடுத்ததே சதானையாக இருந்தது. அதனைத்தொற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 போட்டிகளில் விளையாடி சமன்செய்து அசத்தியுள்ளார். மேலும் இத்தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளதால் நிச்சயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement