
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீராங்கனைகள் அடித்து ஆடி ஸ்கோர் செய்யமுடியாமல் திணறினர். டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (0) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (11) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய ஹர்லீன் தியோல் தாக்குப்பிடித்து விளையாடி ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 22 பந்தில் 21 ரன் மட்டுமே அடித்தார். தீப்தி ஷர்மா 16 ரன்கள் அடித்தார். ஹர்லீன் தியோல் 46 ரன்கள் அடித்தார். எந்த வீராங்கனையுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அடித்து விளையாடவில்லை. எளிதாக ரன் வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசி, இந்திய அணியை 20 ஓவரில் 109 ரன்களுக்கு சுருட்டியது தென் ஆப்பிரிக்க அணி.