
Ben Stokes Record: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஒரு போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய 5ஆவது வீரர் மற்றும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் 600 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் தற்போது பேட்டிங்கில் சாதமடித்தும் அசத்தியுள்ளார்.