
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்துடம் (ஐசிசி) டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு, ஐபிஎல்லை சில வீரர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.
குறிப்பாக ஃபிட்னெஸ் கேள்விக்குறியாக இருந்த ஹர்திக் பாண்டியா, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடியதுடன், தனது முழு பந்துவீச்சு திறமையையும் நிரூபித்து காட்டினார். கேப்டன்சியிலும் அசத்தி, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தினார். அதன்விளைவாக டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி ஆகிய பேட்ஸ்மேன்களும், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசி அசத்தினர். இவர்களில் திரிபாதியை தவிர மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.