
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2025 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக 18ஆண்டு தவத்திற்கு பிறகு ஆர்சிபி அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அந்த ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
அதேசமயம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பல இளம் அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமில்லாத வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு ஐபிஎல் அணியை உருவாக்கியுள்ளார். இதில் பல பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
அந்தவகையில் ஆகாஷ் சோப்ரா தனது அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸின் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் இவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கினை வகித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது பேட்டர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளித்துள்ளார்.