ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே பெங்களூரு அணி தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்னரே கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்வதுடன், அவரை அணியின் புதிய கேப்டனாகவும் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கொண்டு இம்முறை வீரர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்படவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவ்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல்லை அந்த அணி நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஆர்சிபி எந்தெந்த வீரர்களை தக்கவைக்க முடியும் என்பது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்தார். விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே பெங்களூரு அணி தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாகவும், இது தவிர, கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் ஆகியோரை அணியில் இருந்து விடுவிடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால் அவர்கள் தக்கவைக்க விரும்பும் ஒருவீரர் விராட் கோலி. எந்த சந்தேகமும் இல்லாமல் அவர்கள் கண்டிப்பாக விராட் கோலியை தக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் அதேசமயம் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை அந்த அணி தக்கவைக்கும் என்று நான் நினைக்கவில்லை.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் கேமரூன் கிரீனை அந்த அணி ரூ.17 கோடிக்கு வாங்கியுள்ளதால், நிச்சயம் அவரை அந்த அணி தக்கவைக்காது. அதனைத்தொடர்ந்து ரஜத் படிதாரும் ஒரு தக்கவைப்புத் தேர்வு என்று நான் நினைக்கவில்லை. விராட்டைத் தவிர முகமது சிராஜை அவரால் தக்கவைக்க முடியும். இந்த இரு வீரர்களைத் தவிர வேறு யாரையும் ஆர்சிபி அணியானது தக்கவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இதனால் அவர்கள் புதிதாக ஒரு அணியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now