
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மார்ச் 25அம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஆரோன் ஹார்டி, மார்கோ ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சூர்யான்ஷ் ஷேட்ஜ், முஷீர் கான் மற்றும் ஷஷாங்க் சிங் என அவர்களிடம் எட்டு ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இது அந்த அணிக்கு நிறைய விருப்பங்களை அளித்துள்ளனர். அவர்களிடம் உள்ள கீப்பர்களான ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் சிறந்த பேட்டர்கள்.