Advertisement

உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா? - ஏபிடி வில்லியர்ஸ் பதில்!

இந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றால் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்கின்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். 

Advertisement
உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா? - ஏபிடி வில்லியர்ஸ் பதில்!
உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா? - ஏபிடி வில்லியர்ஸ் பதில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 29, 2023 • 11:51 AM

கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. நடக்க இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு நேற்று 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 29, 2023 • 11:51 AM

நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்ட அணியில் ஒரே ஒரு மாற்றமாக அக்சர் படேலுக்கு பதிலாக வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வந்திருக்கிறார். தற்பொழுது எல்லா பெட்டிகளும் இந்திய அணியில் டிக் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய மண்ணில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இதற்குப் பிறகு இந்திய அணி எந்த ஒரு உலகக் கோப்பையையும் கைப்பற்றவில்லை.

Trending

அந்த உலகக் கோப்பையில் விளையாடிய இரண்டு வீரர்கள் மட்டுமே தற்போது 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்கு பின்பாக மிகவும் வலிமையான அணியாக தெரிகிறது. மேலும் உள்நாட்டில் தொடர் நடக்கின்ற காரணத்தினால், ரசிகர்கள் தாண்டி வீரர்களின் மனதிலும் நம்பிக்கை கோப்பையை வெல்ல அதிகமாக இருக்கிறது.

தற்பொழுது இந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றால் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்கின்ற கேள்விக்கு பதில் அளித்த ஏபி.டிவில்லியர்ஸ் “அவர் அடுத்து 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பயணம் செய்ய விரும்புவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இதைச் சொல்வது கடினமான விஷயம். இதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. முதலில் நடக்க இருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவோம்.

விராட் கோலி உங்களுக்கு இதற்கு பதில் சொல்வதாக இருந்தால் இப்படி சொல்வார். ‘ மிக்க நன்றி நான் அடுத்த சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி விளையாட போகிறேன். மேலும் கொஞ்சம் ஐபிஎல் தொடரிலும் விளையாடப் போகிறேன். நான் என்னுடைய கடைசி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்திற்கு நேரம் கொடுக்கவும் இருக்கிறேன். அதனால் அனைவருக்கும் குட் பை சொல்லிக் கொள்கிறேன்’ என்பார்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement