
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி டாப் 2 இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இதில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது இந்திய அணி வெல்ல வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இந்த வரலாற்றை மாற்றும் முயற்சியில் பல கேப்டன்கள் சென்றாலும், அவர்களால் சாதிக்க முடியவில்லை. கடந்த முறை சென்ற விராட் கோலி படையும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்று இருந்தது. இந்த நிலையில் இம்முறை புஜாரா ரகானே போன்ற சீனியர்கள் இல்லையென்றாலும் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா பும்ரா,சமி, சிராஜ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் ருதுராஜ், ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், கில் போன்ற இளம்படையும் இருக்கிறது.
இந்த இளம்படை வீரர்கள் ரன்கள் குவித்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மன்னன் வீழ்த்த முடியும். அதே சமயம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு படை தற்போது சிறப்பாக இருக்கிறது. ரன் குவிப்புக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களை பட்டையை கிளப்பினர். இதனால் தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய வேகப்பந்து வீச்சு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.