
டிவிலியர்ஸும் விராட் கோலியும் நல்ல நண்பர்கள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் டிவிலியர்ஸ் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கு விராட் கோலி பெயரை சொல்லவில்லை என்பது ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி 4,008 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இதில் ஒரு சதமும் 37 அரை சதமும் அடங்கும். அதன் பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 3853 ரன்களும், நான்கு சதம் மற்றும் 29 அரை சதமும் அடங்கும்.
இதேபோன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் டிம் சவுதியும் இரண்டாவது இடத்தில் ஷகிபுல் ஹசனும் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்களை எல்லாம் டிவில்லியர்ஸ் சொல்லவில்லை.