Advertisement

ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அவரை எச்சரித்துள்ளார்.

Advertisement
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 19, 2024 • 12:36 PM

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தென்னாப்பிரிக்கா மண்ணில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவரை ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 19, 2024 • 12:36 PM

அதன்படி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் களமிறங்கிய அவருக்கு ஆந்திர பிரதேச பவுலர்கள் ஷார்ட் பால்களாக வீசி அச்சுறுத்தினர். அதனை அட்டாக் செய்து பவுண்டரியாக மாற்றினார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் மூலம் 48 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த சூழலாக இருந்தாலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை. நிச்சயம் அட்டாக் செய்து ரன்கள் சேர்க்க முயற்சிப்பேன். அதுதான் என் அணுகுமுறையாக இருக்கும்” என்று கூறினார்.

Trending

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நெருங்கியுள்ள சூழலில், ஸ்ரேயாஸ் ஐயரின் பேச்சுகள் ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் பேச்சு குறித்து தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் பேசுகையில், “இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை அட்டாக்கிங் அணுகுமுறையுடன் விளையாட போவதாக கூறியுள்ளார். அவரது அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் அட்டாக் செய்து ரன்களை ஸ்கோர் செய்ய முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யமே அதுதான். அதனை அனுபவத்தின் வாயிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புரிந்து கொள்வார்.

நாள் முழுவதும் ரன்களை சேர்த்து கொண்டிருக்கவே முடியாது. ஏனென்றால் மனம், உடல், சூழல் என்று அத்தனையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோதனையை அளிக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டாக் செய்து விளையாட கற்றுக் கொள்ள வேண்டும். அந்த கற்றல் அனுபவத்தின் மூலமாக மட்டுமே கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement