
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் 40க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அதோடு இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது எந்த அணி? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்த உலக கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? எந்தெந்த வீரர்கள் அதிக ரன்களை குவிப்பார்கள்? எந்தெந்த பவுலர்கள் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக் கோப்பை தொடரில் சிலர் ஸ்டீவ் ஸ்மித் அதிக ரன்களை குவிப்பார் என்று நினைக்கலாம். ஏனெனில் அவருடைய பேட்டிங் டெக்னிக் சற்று வித்தியாசமானது.