
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகாராஜாஸ், ஆசிய லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் டாஸ் வென்ற இந்தியா மகாராஜாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணிக்கு உபுல் தரங்கா, திலகரத்னே தில்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தரங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தில்சன் 32 ரன்களிலும், அடுத்து வந்த முகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக், ஆஸ்கர் ஆஃப்கான் ஆக்யோர் சொற்ப ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கா 48 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.