
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதால் இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் மிடில் ஓவர்களில் சுமாராக விளையாடிய இந்தியா தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டு 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த தோல்வியிலிருந்து இந்திய நாடு வெளிவருவது கடினம் என்பதை நான் புரிந்து கொள்வேன். ஏனெனில் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடி 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. ஆனால் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே இந்தியாவை உலக சாம்பியனாக மாற்றினார்கள். இந்த தவறை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்