-mdl.jpg)
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.