
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இநிந்லையில் இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஐபிஎல்தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரரான விராட் கோலி ஆகியோருக்கு ஆதில் ரஷித் வாய்ப்பு தரவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி ஆதில் ராஷித், தனது அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்பின் மூன்றாம் இடத்தில் மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியாவின் சுரேஷ் ரெய்னாவையும், நான்காம் இடத்தில் மிஸ்டர் 360 என்றழைக்கப்டும் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸையும் தேர்ந்தெடுத்துள்ளார்.