
இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் ஆதில் ரஷித். மேற்கொண்டு இவர் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது டாப் 05 பேட்டர், வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அடில் ரஷீத், சர்வதேச வீரர்களில் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள், முதல் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் முதல் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை குருட்டு தரவரிசையில் தேர்வு செய்துள்ளார். மேலும் அவர், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், அவர் விராட் கோலிக்கு நம்பர் ஒன் இடத்தியும், பாகிஸ்தான்ல் பாபர்ப் ஆசாமிற்கு 5ஆம் இடத்தையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆதில் ரஷித்தின் இக்காணொளியானது வைரலாகிவுள்ளது.
அந்த காணொளியில், அடுத்த வீரரின் பெயர் தெரியாமல் ஆதில் ரஷித் தனது விருப்பப்படி ஐந்து வீரர்களை தரவரிசைப்படுத்தினார். அதன் படி பேட்டர்களுக்கான தரவரிசையில், பாபர் அசாமிற்கு 5ஆம் இடத்தையும். கேன் வில்லியம்சனுக்கு 4ஆம் இடத்தையும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு 3ஆம் இடத்தையும், ஜோ ரூட்டிற்கு இரண்டாம் இடத்தையும் கொடுத்த அவர், விராட் கோலியின் பெயரைக் கூறியதுடம் முதலிடத்தை கொடுத்துள்ளார்.