Advertisement

SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 29, 2024 • 20:18 PM
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 02ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. மேலும் இலங்கை அணிக்கெதிராக ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் நட்சத்திர வீரர் ரஷித் கான் அணியில் இடம்பிடிக்கவில்லை. இருப்பினும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியில் இக்ராம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. 

Trending


மேலும் அறிமுக வீரர்களான நூர் அலி ஸத்ரான், ஸியா உர் ரஹ்மான், முகமது இஷாக் மற்றும் நவீத் ஸத்ரான் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர்கள் முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கே), இப்ராஹிம் ஸத்ரான், அப்துல் மாலிக், நூர் அலி ஸத்ரான், ரஹ்மத் ஷா, பஹிர் ஷா, நசீர் ஜமால், இக்ராம் அலிகில், முகமது இஷாக், கைஸ் அஹ்மத், ஸியா-உர்-ரஹ்மான், ஜாஹிர் கான், யாமின் அஹ்மத்ஸாய், நிஜாத் மசூத், முகமது சலீம், நவீத் ஸத்ரான்,


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement