
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வழக்கத்துக்கு மாறாக 5 நாள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களில் முடிவடைந்து விடும் நிலையில் பல நாட்கள் கழித்து அகமதாபாத் போட்டி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது. நடப்பு தொடரில் ஒரே ஒரு முறை தான் 400 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக 400 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இந்த போட்டியில் இருந்தது. குறிப்பாக புதிய பந்தை ரோஹித் சர்மா விரைவாக எடுத்தது, ஆஸ்திரேலிய அணி ரன் குவிக்க சாதகமாக அமைந்து விட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. மேலும் புதிய பந்தை எடுத்து இரண்டு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ரோஹித் சர்மா வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகபந்து பேச்சாளர் மிச்சர் ஜான்சன், ரோஹித் சர்மா தங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி கூடுதல் ஓவர்கள் வழங்கி இருக்க வேண்டும் என கூறினார். புது பந்து வந்த பிறகு தான் ஆஸ்திரேலியா வீரர்கள் ரன் குவிக்க தொடங்கியதாகவும் அவர் கூறினார்.